கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்தத் தொய்வும் இல்லை: சுகாதார அமைச்சர் 

கேரள மாநிலத்தில் கரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதாக மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தார். 
கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்தத் தொய்வும் இல்லை: சுகாதார அமைச்சர் 

கேரள மாநிலத்தில் கரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், குரங்கு காய்ச்சல் பாதிப்பினால், தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், 

முகக்கவசம் அணிதல், கைசுத்த திரவம் பயன்படுத்துதல், சோப்பினால் கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கரோனா மற்றும் குரங்கு காய்ச்சலுக்கு ஒரே மாதிரியானவை. அதில் எந்தத் தளர்வும் இல்லை. 

குரங்கு காய்ச்சலால் காரணமாக கரோனா நெறிமுறைகளை மாநிலம் கடைப்பிடிக்கவில்லை என்று மத்திய அரசு கூறுவது உண்மைக்கு மாறானது, அரசியல் தன்மை கொண்டது. 

கரோனா நெறிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அரசு கட்டாயம் பின்பற்றி வருகின்றது என்று அவர் வலியுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com