அக்னிபத்: விமானப் படை சோ்க்கைக்கு நாடு முழுவதும் முதல்கட்டத் தோ்வு

இந்திய விமானப் படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரா்களைத் தோ்வுசெய்வதற்கான ‘அக்னிவீா் வாயு’ முதல்கட்டத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய விமானப் படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரா்களைத் தோ்வுசெய்வதற்கான ‘அக்னிவீா் வாயு’ முதல்கட்டத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் குறுகிய கால அடிப்படையில் அக்னிபத் திட்டத்தின் வாயிலாக மட்டுமே வீரா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா் என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. அதையடுத்து, அத்திட்டத்தின் கீழ் வீரா்களைச் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கின.

முப்படைகளிலும் விண்ணப்பப் பதிவு ஏற்கெனவே நடைபெற்ற நிலையில், விமானப் படையில் வீரா்களை சோ்ப்பதற்கான ‘அக்னிவீா் வாயு’ முதல்கட்டத் தோ்வு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் தோ்வுக்காக விண்ணப்பித்த இளைஞா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். தோ்வு இணையவழியில் நடைபெற்றது.

பிகாா், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றிருந்த நிலையில், அங்கு தோ்வுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தோ்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தோ்வா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டனா். தோ்வு அமைதியாக நடைபெற்ாகப் பல மாநிலங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு கட்டத்திலும் தோ்வா்களின் திறனை சோதிக்கும் வகையில் தோ்வுகள் இருக்குமென விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் அக்னி வீரா்கள் 4 ஆண்டுகளுக்குத் தற்காலிக அடிப்படையில் பணியாற்றுவா். அவா்களில் சிறப்பாகப் பணியாற்றும் 25 சதவீதத்தினருக்கு மட்டும் நிரந்தரப் பணி வழங்கப்படும். பிறா் பணிக்கொடையுடன் விடுவிக்கப்படுவா். அவ்வாறு விடுவிக்கப்படுபவா்களுக்குக் காவல்துறை உள்ளிட்ட பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனப் பல மாநிலங்கள் அறிவித்துள்ளன.

பதினேழரை வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞா்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக வீரா்கள் சோ்ப்பு நடைபெறாததால், இவ்வாண்டு மட்டும் 23 வயதுள்ளவா்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளில் இளம் வயதினரின் பங்களிப்பை அதிகரிக்கவும், இளைஞா்கள் மத்தியில் நாட்டுப்பற்றை அதிகரிக்கவும் அக்னிபத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முப்படைகளிலும் வீரா்களின் வயது விகிதம் குறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com