ராணுவ வீரர் உயிரிழந்தால் ரூ. ஒரு கோடி நிதியுதவி: பஞ்சாப் முதல்வர்

பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
சண்டீகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதல்வர் பகவந்த் மான்
சண்டீகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதல்வர் பகவந்த் மான்

பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

கார்கில் விஜய் திவாஸ் முன்னிட்டு சண்டீகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதல்வர் பகவந்த் மான் இன்று அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடுமையான சூழலில் எல்லைகளில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களை வணங்குகிறேன். பணியின்போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும்.

அவர்களின் தியாகத்திற்கு இது ஈடாகாது என்றாலும், அவர்களின் குடும்பம் பொருளாதார நெருக்கடியை சந்திக்காமல் பார்த்துக் கொள்ள உதவும் எனத் தெரிவித்தார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.  இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com