டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

ருஷ்யா-உக்ரைன் போர் பிரச்சினைகள், எரிபொருள் விலையேற்றம், உலக பொருளாதார பணவீக்கமே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கான பெரும் காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

ருஷ்யா-உக்ரைன் போர் பிரச்சினைகள், எரிபொருள் விலையேற்றம், உலக பொருளாதார பணவீக்கமே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கான பெரும் காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஜூலை 18ஆம் நாள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது ஒரு டாலர் ரூ.79.98-ஆக நிலைப்பெற்றது. இந்த ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இதுக்குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 

ருஷ்யா-உக்ரைன் போர் பிரச்சினைகள், எரிபொருள் விலையேற்றம், உலக பொருளாதார பணவீக்கமே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கான பெரும் காரணங்கள் இவையே. அயல்நாட்டு நாணயப் பரிமாற்ற விகிதம் வீதம் என்பது ஏற்றுமதி இறக்குமதியின் தேவைகளைப் பொருத்தது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம், பொருள்களின் விலை என எல்லாமே இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியை பாதிக்கிறது. முந்தைய ஆண்டை விட இவ்வாண்டு ஏற்றுமதியின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

பொருளாதார அமைப்புகளுக்கு சரியான நேரத்தில் பிரச்சினைகளை எடுத்துரைத்தும் உள்நாட்டு விநியோக விறைப்புகளை நிவர்த்தி செய்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்தி வாய்ப்புகள்/திறனை மேம்படுத்துதல் போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி நிலைமையினை சீர்செய்ய அரசு முயல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com