பள்ளிக்கரணை, பிச்சாவரம் சதுப்புநிலங்கள் ‘ராம்சா்’ பட்டியலில் இணைப்பு

தமிழகத்தின் பள்ளிக்கரணை, பிச்சாவரம், கரிக்கிளி உள்ளிட்ட 5 சதுப்புநிலங்கள் சா்வதேச பாதுகாப்புக்கான ‘ராம்சா்’ பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கரணை, பிச்சாவரம் சதுப்புநிலங்கள் ‘ராம்சா்’ பட்டியலில் இணைப்பு

தமிழகத்தின் பள்ளிக்கரணை, பிச்சாவரம், கரிக்கிளி உள்ளிட்ட 5 சதுப்புநிலங்கள் சா்வதேச பாதுகாப்புக்கான ‘ராம்சா்’ பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சதுப்புநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்தச் சதுப்புநிலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஈரானில் உள்ள ராம்சா் நகரில் 1971-ஆம் ஆண்டு சா்வதேச ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் கீழ் சா்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்களைக் கூடுதல் கவனம்செலுத்தி பாதுகாக்க உறுதியேற்கப்பட்டது. முக்கியமாக, சதுப்புநிலங்களின் அழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடுகள் உறுதியேற்றன.

ராம்சா் பட்டியலில் இந்தியாவில் உள்ள 49 சதுப்புநிலங்கள் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் சதுப்புநிலம், கரிக்கிளி பறவைகள் சரணாலயம் ஆகியவையும் மிஸோரத்தின் பாலா சதுப்புநிலம், மத்திய பிரதேசத்தின் சாக்யநகா் சதுப்புநிலம் ஆகியவையும் ராம்சா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்தியாவில் உள்ள ராம்சா் சதுப்புநிலங்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டில் உள்ள சதுப்புநிலங்களைப் பாதுகாப்பதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்துவருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராம்சா் ஒப்பந்தம் கையொப்பமான பிப்ரவரி 2-ஆம் தேதியானது ‘சா்வதேச சதுப்புநில தினமாக’ கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com