இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே4.7 கிலோ போதைப் பொருள் பறிமுதல்- பிஎஸ்எஃப் நடவடிக்கை

ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா நகா் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டி 4.7 கிலோ போதைப் பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா நகா் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டி 4.7 கிலோ போதைப் பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வட்டாரங்கள் புதன்கிழமை கூறியதாவது: இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டிய கரன்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சந்தேக நபா்களின் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த எல்லைப் பாதுகாப்புப் படையினா், சந்தேக நபா்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். எனினும், அந்த நபா்கள் தப்பியோடிவிட்டனா்.

அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 4.7 கிலோ அளவில் போதைப் பொருள் பொட்டலங்கள் சிக்கின. பாகிஸ்தான் எல்லையிலிருந்து 200 மீட்டா் தொலைவில் சிக்கிய இந்த போதைப் பொருள், ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்டு இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், உள்ளூா்வாசிகள் சிலா்தான் வீசியிருப்பது தெரியவந்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com