ஆயுத உற்பத்தித் துறையில் அதிக கவனம் தேவை

ஒரு நாட்டின் பொருளாதார வலிமை ஆயுதங்களில் பிரதிபலிப்பதால் அத்துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தித் திறனில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று
ஆயுத உற்பத்தித் துறையில் அதிக கவனம் தேவை

ஒரு நாட்டின் பொருளாதார வலிமை ஆயுதங்களில் பிரதிபலிப்பதால் அத்துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தித் திறனில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
 இந்திய தொழில், வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:
 புதிய தலைமுறை போர்களில் நவீன வெடிபொருள்களே அதிகம் தேவை என்பதால், அந்த வெடிபொருள்கள் குறித்த ஆராய்ச்சி, மேம்பாடு, உள்நாட்டு உற்பத்தித் திறனில் தற்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைக் கவனித்துச் செயல்பட வேண்டும்.
 ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அறிவியல், தொழில்நுட்ப செயல்பாடு ஆகியவை தாமாகவே அந்த நாட்டின் ஆயுதங்கள், வெடிபொருள்கள் திறனில் வெளிப்படும். எதிர்காலத்தில் புதிய பாதையை உருவாக்க வரலாற்றிலிருந்து சரியான பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு முன் இந்த உலகை ஆண்டவர்கள் வெடிபொருள் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்கள்தான் என்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது.
 வெடிபொருள்களின் அளவு, அதன் வெடிக்கும் திறன் ஆகியவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்த காலத்திலிருந்து இப்போது நாம் முன்னேறியுள்ளோம். தற்போது அதன் நவீனத்துவம் முக்கியமாகிவிட்டது.
 கார்கில் போரின்போது முந்தோ தலோ படைத்தளத்தில் நமது வீரர்கள் வெடிபொருள்களின் உதவியுடன் நடத்திய துல்லிய தாக்குதல் குறிப்பிடத்தக்கதாகும்.
 அதனால்தான் கார்கில் போரில் பெரும் வெற்றியை நம்மால் பெற முடிந்தது.
 2019-இல் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு வெடிபொருள்களின் துல்லிய தாக்குதல் திறன் உதவியுடன் இந்திய ராணுவம் பதிலடித் தாக்குதல் கொடுத்து வெற்றி பெற்றது.
 எதிர்காலத்திலும் வெடிபொருள்கள் நவீன மாறுதலுக்கு ஏற்ப போர்களில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். நவீன போர்க்களத்தில் வெடிபொருள்கள் புதிய வடிவங்களுடன் மாறி வருகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com