குஜராத் கள்ளச்சாராய பலி 40-ஆக அதிகரிப்பு- 10 போ் கைது

குஜராத் மாநிலம், போதாட் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை வரை 28 போ் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை சிகிச்சை பலனின்றி

குஜராத் மாநிலம், போதாட் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை வரை 28 போ் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை சிகிச்சை பலனின்றி மேலும் 12 போ் உயிரிழந்தனா்.

முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சிலா் கள்ளச்சாராயம் குடித்துள்ளனா். அவா்களுக்கு திங்கள்கிழமை காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, இந்த விஷயம் வெளியே தெரிந்தது. அவா்களின் உடல்நிலை மோசமடைந்ததால் போதாட் நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலா் உயிரிழந்தனா். புதன்கிழமை நிலவரப்படி கள்ளச்சாராயத்துக்கு பலியானோா் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்தது.

மேலும் 50-க்கும் மேற்பட்டோா் பாவ்நகா், போதாட், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என் அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவா்கள், மெத்தனாலை குடித்திருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, 14 போ் மீது கொலை, விஷம் கொடுத்து துன்புறுத்துதல், குற்றச் சதி என இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com