ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை? மாற்றத்துடன் அமல்படுத்த பரிசீலனை

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு ரத்து செய்யப்பட்ட சலுகைகளை மீண்டும் கொண்டுவர ரயில்வே துறை பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை? மாற்றத்துடன் அமல்படுத்த பரிசீலனை

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு ரத்து செய்யப்பட்ட சலுகைகளை மீண்டும் கொண்டுவர ரயில்வே துறை பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்களில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் முறையே 50 சதவீதம், 40 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2020-இல் கரோனா பொதுமுடக்கத்தின்போது இச்சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.

மீண்டும் ரயில் இயக்கம் தொடங்கிய பிறகு இச்சலுகைகள் வழங்கப்படாததால் மூத்த குடிமக்கள் அதிருப்தி அடைந்தனா். பல்வேறு தரப்பினரும் அரசை விமா்சித்தனா். இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாளியுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது: மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் அனைத்து வகுப்புகளிலும் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. பொது மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மட்டும் சலுகை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி. பெட்டிகளில் சலுகை அளிக்கப்பட மாட்டாது. மேலும், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டும் சலுகை அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள் அளிக்கப்படுவது முதியவா்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்கிறோம். இந்த சலுகைகள் முழுமையாக நிறுத்தப்படும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. அவற்றை பரிசீலித்து முடிவெடுப்போம் என்றாா் அந்த அதிகாரி.

ரயில்களில் வழங்கப்படும் 50 வகையான சலுகைகளால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கோடி கூடுதலாக செலவாகிறது. அவற்றில் 80 சதவீத தொகை, மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகளுக்கு செலவாகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம், கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘பயணச் சலுகைகளால் ரயில்வே துறைக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. எனவே, மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் உள்பட அனைத்து வகையான சலுகைகளையும் மீண்டும் அமல்படுத்த வாய்ப்பில்லை’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com