இன்னும் வருமான வரி தாக்கல் செய்யவில்லையா?

வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடையவிருக்கும் நிலையில், அதனை நீட்டிப்பது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இன்னும் வருமான வரி தாக்கல் செய்யவில்லையா?
இன்னும் வருமான வரி தாக்கல் செய்யவில்லையா?

வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடையவிருக்கும் நிலையில், அதனை நீட்டிப்பது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்னும் இரண்டு நாள்களில் அதாவது வரும் ஞாயிறன்று நிறைவடையவிருக்கிறது. இதனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பலரும் டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். காலையில் இருந்து சுமார் 6 ஆயிரம் பதிவுகள் இதுவரை பதிவாகியுள்ளன. 

ஏற்கனவே, வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய வருவாய் துறைச் செயலா் தருண் பஜாஜ் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்த நிலையில், இதுவரை கால நீட்டிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கால நீட்டிப்பு செய்யாமல் இருப்பது இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இதுவரை ஜூலை 28ஆம் தேதி வரை 10.45 கோடிப் பேர் தங்களது வருமான வரியை தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வருவாய் துறைச் செயலா் தருண் பஜாஜ் மேலும் கூறியது: வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகும், காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. இறுதி காலக்கெடுவுக்கு முன்பாகவே பெரும்பாலானவா்கள் தங்களது வருமான வரி கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வாா்கள் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

தற்போதைய நிலையில் காலக்கெடு வழக்கம்போல் நீட்டிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு பெரும்பாலான மக்களிடம் நிலவுவதால் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வோா் எண்ணிக்கை சிறிது குறைவாக உள்ளது.

அதன்படி, தினசரி அடிப்படையில் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் கணக்கு தாக்கல் எண்ணிக்கை 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை அதிகரிக்கும்.

கடந்த முறை, வருமான வரி கணக்கு தாக்கலின் எண்ணிக்கை இறுதி நாளில் 9-10 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. அதன்படி ஒரே நாளில் 50 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த முறை இறுதி நாளில் கணக்கு தாக்கல் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com