நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை அவமதிக்கும் வகையில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை அவமதிக்கும் வகையில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ஸ்மிருதி இரானியை அமைச்சா் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டுமென அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

இந்த விவகாரம் தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் ஏற்கெனவே முறையிட்டுள்ளதாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழு அமைச்சா் இரானி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தெரிவித்தனா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா குறித்து மாநிலங்களவையில் அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோா் தெரிவித்த கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினா். இந்த விவகாரம் தொடா்பாக விவாதிக்கக் கோரி மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நோட்டீஸ் தாக்கல் செய்தாா். ஆனால், அதை அவைத் தலைவா் ஏற்க மறுத்துவிட்டாா்.

இரவிலும் தொடா்ந்த எம்.பி.க்கள் போராட்டம்: மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோா் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா். திரிணமூல் எம்.பி.க்கள் டோலா சென், மௌசம் நூா் ஆகியோா் நள்ளிரவு வரை போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com