'குஜராத்திகள், ராஜஸ்தானிகள் இல்லாவிட்டால் மும்பை இருக்காது' - புயலைக் கிளப்பிய பேச்சு

ராஜஸ்தானிகளும், குஜராத்திகளும் மேற்கொண்ட பங்களிப்பை பாராட்டும் விதத்தில் மகாராஷ்டிர ஆளுநர் பேசிய பேச்சு தற்போது புயலைக் கிளப்பியுள்ளது.
'குஜராத்திகள், ராஜஸ்தானிகள் இல்லாவிட்டால் மும்பை இருக்காது' - புயலைக் கிளப்பிய பேச்சு
'குஜராத்திகள், ராஜஸ்தானிகள் இல்லாவிட்டால் மும்பை இருக்காது' - புயலைக் கிளப்பிய பேச்சு


நாட்டின் வணிக தலைநகராக மும்பையை உருவாக்க ராஜஸ்தானிகளும், குஜராத்திகளும் மேற்கொண்ட பங்களிப்பை பாராட்டும் விதத்தில் மகாராஷ்டிர ஆளுநர் பேசிய பேச்சு தற்போது புயலைக் கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அண்மையில் பேசிய பேச்சுத்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, மகாராஷ்டிரத்தை விட்டு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மக்கள் மும்பையை விட்டு வெளியேற முடிவெடுத்துவிட்டால், நாட்டின் வணிக தலைநகராக மும்பை இருக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் கோஷியாரி கூறுகையில், நான் எப்போதும் மக்களிடம் சொல்லிக் கொண்டேயிருப்பேன். மகாராஷ்டிரத்தில் குறிப்பாக தாணே மற்றும் மும்பையிலிருந்து குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி மக்களை வெளியேறுமாறு கூறினால், பிறகு மும்பையில் பணமே இருக்காது. அதன்பிறகு, நாட்டின் வணிக தலைநகராகவும் மும்பை இருக்காது என்று கூறியுள்ளார்.

இதற்கு சிவ சேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரௌத் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மராத்தி மக்கள் இங்கே அவமதிக்கப்படுகிறார்கள். முதல்வர் ஷிண்டே.. இதை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இல்லை உங்களது மகாராஷ்டிரம் வேறு ஏதேனுமா? உங்களுக்கு சுய மரியாதை இருந்தால், உடனடியாக ஆளுநரை பதவி விலகச் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com