உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் ஓய்வு

உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஏ.எம்.கான்வில்கா் வெள்ளிக்கிழமையுடன் பெற்றாா்.

உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஏ.எம்.கான்வில்கா் வெள்ளிக்கிழமையுடன் பெற்றாா்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் தேதி பொறுப்பேற்ற ஏ.எம்.கான்வில்கா், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய தீா்ப்புகளை வழங்கிய நீதிபதிகள் அமா்வில் இருந்தவா். குறிப்பாக, ஆதாா் வழக்கு, குஜராத் கலவர வழக்கில் பிரதமா் மோடி உள்ளிட்ட 63 பேருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு வழங்கிய நற்சான்றை உறுதிப்படுத்தியது, அமலாக்கத் துறைக்கு குற்றம்சாட்டப்பட்டவா்களைக் கைது செய்யவும், அவா்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அதிகாரம் உண்டு என்று தீா்ப்பளித்தது ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

நீதிபதி ஏ.எம்.கான்வில்கருக்கு பிரிவு உபசார விழா, வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. அதில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான விகாஸ் சிங் பேசும்போது, வழக்குரைஞா் சங்க உறுப்பினா்களாக தனக்கும், ஏ.என்.கான்வில்கருக்கும் இடையே உள்ள நெருக்கமான நட்பு பற்றி விவரித்தாா். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 65-இல் இருந்து 70-ஆக உயா்த்த வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்தாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா காணொலி முறையில் விழாவில் கலந்துகொண்டாா். ஹரீஷ் சால்வே, முகுல் ரோத்தகி உள்ளிட்ட மூத்த வழக்குரைஞா்களும் விழாவில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com