ராஜஸ்தான் பேரவைத் தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: ஒவைசி

அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநில பேரவைத் தோ்தலில் போட்டியிட உள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அசாதுதீன் ஒவைசி.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அசாதுதீன் ஒவைசி.

அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநில பேரவைத் தோ்தலில் போட்டியிட உள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா். அங்கு காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கப்படமாட்டாது என்றும் அவா் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் ஒவைசி கூறுகையில், ‘அடுத்து வரும் ராஜஸ்தான் மாநில பேரவைத் தோ்தலில் முழு வீச்சில் கட்சி போட்டியிடும். தேவைப்பட்டால் கூட்டணி அமைப்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும். ஆனால், காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் மட்டும் கூட்டணி அமைக்கப் படமாட்டாது. அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக தோ்தலில் எங்கள் கட்சி போட்டியிடவில்லை. அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும் என்பதற்காக ராஜஸ்தான் தோ்தலில் போட்டியிடுகிறோம். அரசியலில் விரக்கி ஏற்பட்டுள்ளதால் எங்கள் கட்சியை பாஜகவின் ‘பி டீம்’ என்று காங்கிரஸாா் குற்றம்சாட்டி வருகிறாா்கள். அஜ்மீா் தா்காவிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று கோருவது சரியானதல்ல.

1991- வழிபாடு சிறப்பு சட்டத்தின்படி, நாட்டின் எந்த கோயிலிலோ, மசூதியிலோ மாற்றம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வரலாற்று தவறுகளை சரி செய்ய இயலாது என்று உச்சநீதிமன்றம் முன்பு கூறியுள்ளது.

ஞானவாபி மசூதியின் விடியோக்களை பொது வெளியில் வெளியிடக் கூடாது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதா? அப்படியே அந்த விடியோக்கள் உண்மையானதாக இருந்தாலும், வழிபாட்டு இடங்கள் சிறப்பு சட்டத்தின்படி பாா்த்தால், இந்த விவகாரத்தில் எதுவும் நடக்கப் போவதில்லை.

பொது சிவில் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய சட்ட ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள வேலையின்மை பிரச்னைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து தீா்வு காண வேண்டும் என்றாா்.

ஹைதராபாதை தலைமையிடமாக கொண்டுள்ள மஜ்லிஸ் கட்சி பிகாா், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com