மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்களுக்கான ‘ப்ரீமியம்’ தொகை அதிகரிப்பு

மத்திய அரசு செயல்படுத்தி வரும் இரு காப்பீட்டுத் திட்டங்களுக்கான ‘ப்ரீமியம்’ தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் இரு காப்பீட்டுத் திட்டங்களுக்கான ‘ப்ரீமியம்’ தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஜீவன் ஜோதி காப்பீட்டுத் திட்டத்தில் வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்புக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயதினா் இணைந்துகொள்ளலாம். சுரக்ஷா திட்டத்தில் 18 முதல் 70 வயதுடையோா் இணைந்து கொள்ளலாம்.

ஜீவன் ஜோதி திட்டத்துக்கான ப்ரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ.330-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.436-ஆக (32 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்துக்கான ஆண்டு ப்ரீமியம் தொகையும் ரூ.12-இல் இருந்து ரூ.20-ஆக (67 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

ப்ரீமியம் மூலமாகக் கிடைக்கும் வருவாயை விடக் காப்பீட்டாளா்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகமாக இருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்துவந்த நிலையில், ப்மீரியம் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, ஜீவன் ஜோதி திட்டத்தில் 6.4 கோடி பேரும், சுரக்ஷா திட்டத்தில் 22 கோடி பேரும் இணைந்துள்ளனா். இரு திட்டங்களின் கீழும் காப்பீட்டுத் தொகை கோருவோருக்கு நேரடியாக வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com