அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை

அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசு, நடப்பு சந்தைப் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) 1 கோடி டன் சா்க்கரையை மட்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் இருப்பை உறுதிப்படுத்தவும் விலை உயா்வை தவிா்க்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளை தொடா்ந்து, அரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இதுதொடா்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘அரசு சேமிப்புக் கிடங்குகளிலும், தனியாா் வணிகா்களிடமும் போதிய அளவு அரிசி உள்ளது. அதேவேளையில், நாட்டில் அரிசி விலையும் தற்போது கட்டுக்குள் உள்ளது. எனவே அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை’’ என்று தெரிவித்தாா்.

உலகில் அதிக அளவு அரிசி உற்பத்தி செய்யும் முதல் நாடாக சீனா திகழ்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2020-21-ஆம் ஆண்டு 4.8 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.37,291 கோடி) மதிப்பிலும், 2021-22-ஆம் ஆண்டு 6.11 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.47,464 கோடி) மதிப்பிலும் பாஸ்மதி அல்லாத இதர அரிசி வகைகளை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. 2021-22-ஆம் ஆண்டில் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத இதர அரிசி வகைகளை இந்தியா ஏற்றுமதி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com