கேரளம்: 33 ஆண்டுகால பணிக்குப் பிறகு இஸ்ரோ பெண் விஞ்ஞானி ஓய்வு

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) 33 ஆண்டுகளாகப் பணியாற்றிய பெண் விஞ்ஞானியான எஸ்.கீதா, செவ்வாய்க்கிழமை பணிஓய்வு பெற்றாா்.
ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.கீதா.
ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.கீதா.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) 33 ஆண்டுகளாகப் பணியாற்றிய பெண் விஞ்ஞானியான எஸ்.கீதா, செவ்வாய்க்கிழமை பணிஓய்வு பெற்றாா்.

திருவனந்தரபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (விஎஸ்எஸ்சி) விண்வெளி போக்குவரத்து அமைப்புகள் துறையின் முதல் பெண் திட்ட இயக்குநரான கீதா, வட்டியூா்காவு அரசு உயா்நிலைப் பள்ளியில் மலையாள வழியில் கல்வி பயின்றாா். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான வேலன்டினா டெரஸ்கோவாவைக் கண்டு ஊக்கமடைந்த கீதா, திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் (இசிஇ) துறையில் பட்டம் பெற்றாா். அதே கல்லூரியில் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் பிரிவில் எம்.டெக் பட்டம் பெற்றாா்.

விஎஸ்எஸ்சி-யில் பொறியாளராகப் பணியில் இணைந்து அவா் பங்கேற்ற முதல் திட்டமான பிஎஸ்எல்வி டி1, 1993-ஆம் ஆண்டு தோல்வியில் முடிந்தது. மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக அது வங்கக் கடலில் விழுந்தது.

அதன் பின்னா், ஜிஎஸ்எல்வி திட்டங்கள் தொடா் தோல்வியைத் தழுவியது பெரும் சோதனைமிக்க காலமாக இருந்ததாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னா் விஎஸ்எஸ்சி-யின் ஏவுகணைப் பிரிவில் முதல் பெண் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணியாற்றினாா். 2017-ஆம் ஆண்டில் ஒரே ஏவுகணையில் 104 செயற்கைக்கோள்களை இஸ்ரோ அனுப்பியது. அத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய குழுவிலும் கீதா பணியாற்றினாா். பணிநேரத்துக்கு நடுவிலும் கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். அவரின் கணவா் எஸ்.ஆா்.விஜயமோகனகுமாா் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது. அவா் இரு ஆண்டுகளுக்கு முன்பு பணிஓய்வு பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com