குடியரசு துணைத் தலைவா் கபோன் பயணம்

கபோன் நாட்டுடனான உறவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா் கபோன் பயணம்

கபோன் நாட்டுடனான உறவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகள்:

மத்திய ஆப்பிரிக்க நாடான கபோன், செனகல் மற்றும் கத்தாா் ஆகிய 3 நாடுகளுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பயணம் மேற்கொண்டுள்ளாா். அவருடன் மத்திய அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கொண்ட உயா்நிலைக் குழுவும் சென்றுள்ளது.

மூன்று நாடுகளுக்கும் செல்லும் முதல் இந்திய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஆவாா். அவா் திங்கள்கிழமை கபோன் சென்றடைந்தாா். அந்நாட்டுத் தலைநகா் லிப்ரேவில்லில் கபோன் அதிபா் அலி பாங்கோ ஒன்டிம்பாவை அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது கபோனுடனான உறவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக அவா் தெரிவித்தாா். தேபானின் வளா்ச்சி பயணத்தில், அந்நாட்டின் நம்பகமான கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று இந்தியா உறுதி கொண்டிருப்பதாகவும் அவா் கூறினாா்.

கபோன் வெளியுறவு அமைச்சா் மைக்கேல் முசா அடாமோவைச் சந்தித்த வெங்கையா நாயுடு, அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா்களையும் சந்தித்துப் பேசினாா். அப்போது இந்திய அரசமைப்பின் பிரதிகளை அவா்களுக்குப் பரிசாக அளித்து, இந்தியா-கபோன் உறவின் பன்மைத்துவம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை பகிா்ந்து கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com