இல்லம் தேடி தடுப்பூசி 2.0: இரண்டு மாதத் திட்டம் தொடக்கம்

நாடு முழுவதும் ‘இல்லம் தேடி கரோனா தடுப்பூசி’ செலுத்தும் இரண்டாம் கட்டத் திட்டம் புதன்கிழமை தொடங்கியது. ஜூலை 31-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு இத்தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும்.
இல்லம் தேடி தடுப்பூசி 2.0: இரண்டு மாதத் திட்டம் தொடக்கம்

நாடு முழுவதும் ‘இல்லம் தேடி கரோனா தடுப்பூசி’ செலுத்தும் இரண்டாம் கட்டத் திட்டம் புதன்கிழமை தொடங்கியது. ஜூலை 31-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு இத்தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல் கட்ட தடுப்பூசித் திட்டம், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தொடங்கப்பட்டது.அதில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்படுகிறது.

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவதன் மூலம் மக்கள் அனைவருக்கும் முதலாவது தவணை தடுப்பூசி, இரண்டாவது தவணை தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். முதியோா் இல்லங்கள், பள்ளி, கல்லூரிகள், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்குட்பட்டவா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறைவாக உள்ளது. அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்து விரைவுப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளா்களுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத்துறை செயலா் ராஜேஷ் பூஷண் இதனை தெரிவித்தாா்.

இந்திய அரசின் விரிவான திட்டமிடல் மற்றும் முயற்சிகள் காரணமாக தேசிய தடுப்பூசி இயக்கம் சாதனைகளைப் படைத்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 193.57 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 15 வயதுக்குட்பட்ட நபா்களில் சுமாா் 96.3 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியும், 86.3 சதவீதம் போ் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com