சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

தெலங்கானா உருவான தின விழாவில் சந்திரசேகர் ராவ் பங்கேற்பு

தெலங்கானா மாநில உருவாக்க தினத்தை அனுசரிக்கும் விழாவில் அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கலந்துகொண்டார். 

தெலங்கானா மாநில உருவாக்க தினத்தை அனுசரிக்கும் விழாவில் அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கலந்துகொண்டார். 

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி தெலங்கானா பிரிக்கப்பட்டது. தனி மாநிலமாக உருவாக்கப்பட்டு இன்று 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

கரோனா தொற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில், இந்தாண்டு தெலங்கானா உருவான நாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடியது. 

முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையில், தெலுங்கானாவுக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், தனி மாநில கனவை நனவாக்க மக்கள் நடத்திய நீண்ட போராட்டத்தை நினைவு கூர்ந்தார்.

முதல்வர் தனது அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி பவனில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர், பொது பூங்காவில் தேசியக் கொடியை ஏற்றினார். பொது பூங்கா அருகே உள்ள கன் பூங்காவில் தெலங்கானா தியாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தெலங்கானா மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com