ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிகாா் அமைச்சரவை ஒப்புதல்

பிகாரில் அனைத்து ஜாதியினரின் கணக்கெடுப்பை நடத்த மாநில அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது
ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிகாா் அமைச்சரவை ஒப்புதல்

பிகாரில் அனைத்து ஜாதியினரின் கணக்கெடுப்பை நடத்த மாநில அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த மாநில தலைமைச் செயலா் அமீா் சுபானி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாகத் தொடங்கப்படும். பொது நிா்வாக துறையின் தலைமையில் அனைத்து ஜாதியினரின் கணக்கெடுப்பு நடைபெறும்’ என்றாா்.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பிகாா் அரசு தன்னிச்சையாக மாநிலத்தில் இந்த கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வலியுறுத்தி 2018, 2019 ஆண்டுகளில் பிகாா் பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com