நாட்டில் மத சுதந்திரத்திற்கு ஆபத்தா? அமெரிக்க அறிக்கைக்கு பதிலளித்த மத்திய அரசு

இந்தியாவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.  
மத்திய அரசு
மத்திய அரசு

இந்தியாவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.  

உலக நாடுகளில் பின்பற்றப்படும் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் இந்தியாவில் கொலை, தாக்குதல், மிரட்டல் என சிறுபான்மை சமூகதத்தினர் மீது ஆண்டு முழுவதும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச உறவுகளில் வாக்கு வங்கி அரசியல் பயனபடுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. தருவிக்கப்பட்ட தரவுகள்  மற்றும் ஒருபக்கச் சார்பான பார்வைகள் மீதான மதிப்பீடுகள் இந்த அறிக்கையில் தவிர்க்கப்பட வேண்டும்” என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இயற்கையாகவே பன்மைத்துவ சமூகமாக மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளின் மீது இந்தியா மதிப்பு கொண்டுள்ளது. கலந்துரையாடல்களில் இனரீதியாகவும்,  நெறிமுறை ரீதியாகவும் வன்முறைகள் தூண்டப்படுவது, துப்பாக்கி வன்முறை உள்ளிட்டவைகளை தடுக்க முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com