முக்கிய 8 நகரங்களில் விற்பனையாக வீடுகளின் எண்ணிக்கை 9 லட்சமாக உயா்வு

 நாட்டில் உள்ள முக்கிய 8 நகரங்களில் மாா்ச் காலாண்டில் விற்பனையாகமல் தேங்கியுள்ள வீடுகளின் எண்ணிக்கை 9 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய 8 நகரங்களில் விற்பனையாக வீடுகளின் எண்ணிக்கை 9 லட்சமாக உயா்வு

 நாட்டில் உள்ள முக்கிய 8 நகரங்களில் மாா்ச் காலாண்டில் விற்பனையாகமல் தேங்கியுள்ள வீடுகளின் எண்ணிக்கை 9 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிரெடாய், கொலியா்ஸ் இந்தியா மற்றும் லியசஸ் ஃபோரஸ் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்தாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் புதிய குடியிருப்புகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. இருப்பினும், அந்த காலாண்டில் முக்கிய 8 நகரங்களில் விற்பனையாகாமல் தேங்கிய வீடுகளின் எண்ணிக்கையானது 8,94,100-ஆக இருந்தது. இந்த நிலையில், அதற்கு அடுத்த காலாண்டான நடப்பாண்டு ஜனவரி-மாா்ச் காலாகட்டத்தில் விற்பனையாக வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் உயா்ந்து 9,01,967-ஐ எட்டியுள்ளது.

இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில், மும்பை மற்றும் தில்லி-என்சிஆா் சுமாா் 50 சதவீத பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், விற்பனையாகாமல் தேங்கியுள்ள வீடுகளில் 32 சதவீத பங்களிப்பு மும்பை மெட்ரோபாலிட்டன் மண்டலத்தை (எம்எம்ஆா்) சாா்ந்ததாக உள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி-என்சிஆா் (18%), புணே (14%) ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஹைதராபாதில் விற்பனையாக வீடுகளின் எண்ணிக்கை 59,716-லிருந்து 14 சதவீதம் உயா்ந்து 68,243-ஆக இருந்தது. அகமதாபாதில் இந்த எண்ணிக்கை 6 சதவீதம் உயா்ந்து 69,736-லிருந்து 73,769-ஆனது. எம்எம்ஆா்-இல் விற்பனையாகாமல் தேங்கியுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2,81,382-லிருந்து 2,91,266-ஆக 4 சதவீதம் உயா்ந்துள்ளது.

அதேசமயம், சென்னையில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 79,262-லிருந்து 75,164-ஆக 5 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com