ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்

ஒடிசா அமைச்சரவை மாற்றம்: அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா

ஒடிசாவில் அமைச்சரவை மாற்றம் நடவுக்கவுள்ள நிலையில்  ஒடிசா மாநிலத்தில் அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ளனர். 

புவனேஸ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் நாளை அமைச்சரவையை மாற்றியமைக்க உள்ள நிலையில், அம்மாநில அமைச்சர்கள் அனைவரும் இன்று தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். ராஜிநாமா கடித்தை சட்டப் பேரவைத் தலைவரிடம் அளித்தனர்.

ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் மே 29 ஆம் தேதியுடன் தனது ஐந்தாவது பதவிக்காலத்தின் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக மாநிலத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனர். 

திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பத்மநாப பெஹரா, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு, நீர்வளத்துறை அமைச்சர் ரகுநந்தன் தாஸ், எஃகு மற்றும் சுரங்கங்கள், பணித்துறை அமைச்சர் பிரபுல்லா குமார் மாலீக், திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் பிரேமானந்தா நாயக் ஆகியோர் இதுவரை ராஜிநாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் சுர்ஜ்ய நாராயண் பட்ரோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக தனது அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவை: புதிய அமைச்சர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணிக்கு ராஜ்பவன் மாநாட்டு மண்டபத்தில் பதவியேற்க உள்ளனர். பிரதீப் அமத் மற்றும் லத்திகா பிரதான் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கியமாக, 2024 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்தவும் புத்துயிர் பெறவும் ஒரு முக்கிய முயற்சியாக இந்த மறுசீரமைப்பு கருதப்படுகிறது.

2019 மே 29 -இல் தொடர்ச்சியாக 5ஆவது முறையாக ஒடிஸா முதல்வராக பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் பதவியேற்றார். 

நவீன் பட்நாயக்கை தொடர்ந்து, 20 பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் பிரபுல்லா மாலீக், விக்ரம் கேசரி அருக், நிரஞ்சன் புஜாரி, அருண் சாகு, பிரதாப் ஜேனா, சுஷந்த் சிங், நாபா கிஷோர் தாஸ் உள்ளிட்ட 11 பேர், கேபினட் அமைச்சர்கள். எஞ்சிய 9 பேர், இணையமைச்சர்கள். அமைச்சரவையில் 2 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com