கேரளத்தில் மீண்டும் கரோனா அதிகரிப்பு

கேரளத்தில் புதிதாக 1,544 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரளத்தில் புதிதாக 1,544 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த நான்கு நாள்களாக முறையே 1,370, 1,278 மற்றும் 1,465 ஆகப் பதிவாகி வந்த தினசரி பாதிப்புகள் இன்று 1,500-ஐ தாண்டி 1,544 ஆகப் பதிவாகியுள்ளது.

தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 11.39 ஆகப் பதிவாகியுள்ளது. வாராந்திர சராசரி 8.95 ஆகப் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி அங்கு 7,972 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com