2021-22 நிதியாண்டுக்கான இபிஎப் வட்டி விகிதம் 8.1% குறைப்பு: தொழிலாளர்கள் அதிர்ச்சி

கடந்த 2020-22 ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதியில்(இபிஎப்) இருக்கும் வைப்புத் தொகையின் மீதான 8.1 சதவிகித வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. 
2021-22 நிதியாண்டுக்கான இபிஎப் வட்டி விகிதம் 8.1% குறைப்பு: தொழிலாளர்கள் அதிர்ச்சி


கடந்த 2020-22 ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதியில்(இபிஎப்) இருக்கும் வைப்புத் தொகையின் மீதான 8.1 சதவிகித வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. 

இந்த 8.1 சதவிகித வட்டி விகிதம் என்பது 1977-78 ஆம் ஆண்டுகளுக்கும் குறைவான வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய தொழிலாளா்களுக்கான ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎப் -இல் இருக்கும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளா்களுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான வைப்பு நிதிக்கு 40 ஆண்டு குறைவான 8.1 சதவிகித வைப்பு நிதியை மட்டுமே அளிக்க முடிவு செய்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) 2021-22-நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2020-21 இல் வழங்கப்பட்ட 8.5 சதவிகிதத்தில் இருந்து 8.1 சதவிகிதமாகக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இபிஎப் அலுவலக உத்தரவின்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இபிஎப் திட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களின் வைப்புத் தொகைக்கு 2021-22 ஆம் ஆண்டிற்கு 8.1 சதவிகித வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்த பின்னர் தொழிலாளர் அமைச்சகம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்பித்து ஒப்புதல் பெற்றுள்ளது. 

இதன் மூலம் மத்தி அரசு ஒப்புதல் அளித்துள்ள 8.1 சதவிகித வட்டி வருமானத்தை இபிஎப்ஓ அமைப்பு இபிஎப் கணக்குகளில் வரவு வைக்கும் பணிகளைத் தொடங்கும் 8.1 சதவிகித இபிஎப் வட்டி விகிதம் 1977-78 இல் 8 சதவிகிதமாக இருந்தது. 

இதைத் தொடர்ந்து இப்போது 8.1 சதவிகித வட்டி விகிதம் என்ற குறைவான அளவைக் கொண்டுள்ளது. 

மார்ச் 2020 இல், இபிஎப்ஓ 2018-19-க்கு வழங்கப்பட்ட 8.65 சதவிகித்தில் இருந்து 2019-20 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.5 சதவிதமாகக் குறைத்தது,  2019-20-க்கு வழங்கப்பட்ட இபிஎப் வட்டி விகிதம் 2012-13-க்குப் பிறகு மிகக் குறைவானது, அது 8.5 சதவிதமாகக் குறைக்கப்பட்டது.

2016-17 -இல் 8.65 சதவிகித வட்டி விகிதத்தையும் 2017-18 -இல் 8.55 சதவிகிதத்தையும் வழங்கியது. 2015-16-இல் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவிகிதமாக இருந்தது. இது 2013-14 மற்றும் 2014-15 -இல் 8.75 சதவிகிதமான வட்டி விகிதத்தை வழங்கியது, இது 2012-13-க்கான 8.5 சதவிதத்தை விட அதிகமாகும். 2011-12 இல் வட்டி விகிதம் 8.25 சதவிதமாக இருந்தது.

2020-21 -இல் அதன் முந்தைய ஆண்டைப் போலவே 8.5 சதவித வட்டி விகிதத்தை செலுத்தியது. 2018-19 இல் 8.65 சதவிதமாகவும், 2017-18 -இல் 8.55 சதவிதமாகவும் இருந்தது.

நிதியாண்டும் - வட்டி விகிதமும்
2021-22      8.1% 
2020-21      8.5% 
2019-20      8.5% 
2018-19      8.65% 
2017-18      8.55% 
2016-17      8.65% 
2015-16      8.8% 
2014-15      8.75% 
2013-14      8.75 % 
2012-13      8.5 % 
2011-12      8.25% 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஏற்பாடுகள் சட்டம், 1952 இன் கீழ் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு கட்டாயமாகும். ஒரு தொழிலாளரின் அடிப்படை சம்பளத்தில் குறைந்தபட்சம் 12 சதவிகிதம் கட்டாயமாக வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட வேண்டும், அதே சமயம், பணியளிக்கும் ஒரு நிறுவனம் சமமான தொகையை வழங்குகிறது. 

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான முக்கிய சேமிப்பாக உள்ளது தான் பிஎப். ஓய்வு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவியாக இருக்கும் பிஎப் மீதான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com