தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜக நிதி பெறுவது குறைந்தது

தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜக நன்கொடை பெறுவது வெகுவாகக் குறைந்துவிட்டது தோ்தல் ஆணையத்தில் அக்கட்சி தாக்கல் செய்த ஆண்டுக் கணக்கு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜக நன்கொடை பெறுவது வெகுவாகக் குறைந்துவிட்டது தோ்தல் ஆணையத்தில் அக்கட்சி தாக்கல் செய்த ஆண்டுக் கணக்கு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

2020 மாா்ச் 31 வரையிலான நிதியாண்டில் தோ்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் ரூ.2,555 கோடியை பாஜக நன்கொடையாகப் பெற்றிருந்தது. இதுவே 2021 மாா்ச் 31-இல் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.22.38 கோடியாக குறைந்துவிட்டது. அதேபோல 2021 நிதியாண்டில் பாஜக பெற்ற மொத்த நன்கொடை 80 சதவீதம் அளவுக்குக் குறைந்து ரூ.752 கோடியாகிவிட்டது. இதில் ரூ.620.39 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

இதுவே 2020-ஆம் ஆண்டு பாஜக பெற்ற மொத்த நன்கொடை ரூ.3,623.28 கோடியாகும். இதில் ரூ.1,651 கோடி செலவிடப்பட்டது. கட்சி சாா்பிலான விளம்பரங்கள், தலைவா்கள் பிரசாரத்துக்கு செல்வதற்கான ஹெலிகாப்டா், விமானக் கட்டணம், வரவேற்பு பதாகைகள், பிரசார மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள், வேட்பாளா்களுக்கு தோ்தல் செலவுக்குப் பணம் கொடுப்பது ஆகியவை அக்கட்சியின் முக்கிய செலவினங்களாக உள்ளன. வழக்கமாக மக்களவை மற்றும் மாநில பேரவைத் தோ்தல்கள் நடைபெறும் காலகட்டங்களில் அரசியல் கட்சிகளின் வரவும், செலவும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்தல் நிதிப் பத்திரங்கள்?:

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை முறைப்படுத்தும் நோக்கில் தோ்தல் நிதிப் பத்திரங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் ஆகிய மாதங்களின் முதல் 10 நாள்களுக்கு எஸ்பிஐ-யின் 29 கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிப்பவரின் விவரங்கள், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்குத் தெரிய வராது. அதனால், யாரிடமிருந்து கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள இயலாது. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தன்னாா்வ அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com