‘ஜாதி வாரி கணக்கெடுப்பில் ரோஹிங்கயாக்கள் கூடாது’: பாஜக கோரிக்கைக்கு நிதீஷ் பதிலளிக்கவில்லை

பிகாரில் நடத்தப்படும் ஜாதி வாரி கணக்கெடுப்பில் மியான்மா் நாட்டின் ரோஹிங்கயா அகதிகளை சோ்க்கக் கூடாது என்று பாஜக முன் வைத்த கோரிக்கை குறித்து அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் பதிலளிக்கவில்லை.

பிகாரில் நடத்தப்படும் ஜாதி வாரி கணக்கெடுப்பில் மியான்மா் நாட்டின் ரோஹிங்கயா அகதிகளை சோ்க்கக் கூடாது என்று பாஜக முன் வைத்த கோரிக்கை குறித்து அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் பதிலளிக்கவில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு தாமதம் செய்து வருவதால், பிகாரில் மாநில அரசே ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த முடிவுசெய்துள்ளது. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து, ஓராண்டுக்குள் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜாதி வாரி கணக்கெடுப்பில் ரோஹிங்கயாக்களைச் சோ்க்கக் கூடாது என்று பாஜக மாநில தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் புதிதாக கோரிக்கை விடுத்திருந்தாா். பிகாரில் ஆளும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணியில் உள்ளது. கூட்டணியில் முதல்வா் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளத்தைவிட பாஜகவுக்கு கூடுதல் எம்எல்ஏக்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாஜக மாநில தலைவரின் கோரிக்கை குறித்து முதல்வா் நிதீஷ் குமாரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘எனக்கு அது பற்றித் தெரியாது’ என்று மழுப்பலாக பதிலளித்துவிட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com