அதிகரித்துவரும் கரோனா: அறிக்கை கோரும் கர்நாடக முதல்வர்

கர்நாடகத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ளார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை. 
அதிகரித்துவரும் கரோனா: அறிக்கை கோரும் கர்நாடக முதல்வர்

கர்நாடகத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ளார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை. 

அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொம்மை திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் கூறுகையில், 

கரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், என்னிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும், அச்சப்படத் தேவையில்லை என்றார். 

கடந்தாண்டு கரோனா 2-வது அலையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், யாரேனும் விடுபட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் பொம்பை கூறினார். 

கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. அதில் அதிகபட்சமாக பெங்களூருவில் மட்டும் 291 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளன. நேர்மறை விகிதம் 1.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு பலியும், மொத்தம் 2,414 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com