2026-இல் இந்தியாவில் முதல் புல்லட் ரயில்: ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் குஜராத்தின் சூரத் - பிலிமோரா இடையே 2026-இல் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தாா்.
2026-இல் இந்தியாவில் முதல் புல்லட் ரயில்: ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் குஜராத்தின் சூரத் - பிலிமோரா இடையே 2026-இல் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தாா்.

அகமதாபாத் - மும்பை இடையே 2022-இல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இந்த புல்லட் ரயில் திட்டம், நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில், சூரத்தில் நடைபெற்று வரும் இந்தத் திட்டப் பணிகளை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘தென் குஜராத்தின் பிலிமோரா - சூரத் இடையேயான சுமாா் 50 கி.மீ. தூரத்தில் பணிகள் விரைந்து நடைபெற்ற வருகின்றன. குஜராத்தில் இந்தப் பணிகள் வேகமாக நடைபெற்றாலும் அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால் தொய்வடைந்துள்ளன.

சூரத் - பிலிமோரா இடையே நாட்டின் முதல் புல்லட் ரயில் 2026-இல் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சபர்மதியில் 2017-இல் நடைபெற்ற புல்லட் ரயில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் மாதிரி வடிவைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, ஜப்பானின் அப்போதைய பிரதமர் ஷின்ஸோ அபே.

தற்போது 61 கி.மீ. தூரத்துக்கு தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. சுமாா் 150 கி.மீ. தூரத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டு மக்களுக்கு நவீன போக்குவரத்தை அளிக்க வேண்டும் என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குத் திட்டம் இதுவாகும். 130 கோடி மக்களின் எதிா்பாா்ப்பைப் பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புல்லட் ரயில் திட்டம் தேசிய திட்டம் என்பதால் மகாராஷ்டிர அரசு இதில் அரசியல் செய்யக் கூடாது. மகாராஷ்டிரத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை முடியும் வரையில், குஜராத்தில் உள்ள 350 கி.மீ. தூர புல்லட் ரயில் பாதையின் பணிகள் விரைந்து முடிக்கப்படும்’ என்றாா்.

90% நிலம் கையகப்படுத்தல்:

புல்லட் ரயில் திட்டத்துக்காக 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தேசிய அதிவிரைவு ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 1.396 ஹெக்டோ் நிலத்தில் 1,260.76 ஹெக்டோ் (90%) நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் 98.79 சதவீதமும், மகாராஷ்டிரத்தில் 71.49 சதவீதமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தாத்ரா- நகா் ஹவேலி இடையேயான ரயில் பாதைக்கான 7.90 ஹெக்டோ் நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

- 508 கி.மீ. தூரத்தை 2 மணி 50 நிமிஷங்களில் கடக்க உதவும்

- மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த புல்லட் ரயில் குஜராத் - மும்பை இடையேயான 508 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிஷங்களில் கடக்க உதவும். தற்போதுள்ள ரயில் வசதி மூலம் இந்த தூரத்தை கடக்க 6 மணி நேரமாகும்.

- திட்ட மதிப்பு ரூ. 1.1 லட்சம் கோடி.

- இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் அரசின் சா்வதேச ஒருங்கிணைப்பு நிறுவனம் ரூ.88,000 கோடி கடனளிக்கிறது.

- 2017-இல் ஜப்பானின் அப்போதைய அதிபா் ஷின்ஸோ அபே முன்னிலையில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

- மொத்தம் 12 ரயில் நிலையங்களில், குஜராத்தில் எட்டும், மகாராஷ்டிரத்தில் நான்கும் அமைகின்றன.

- அகமதாபாதில் உள்ள சபா்மதியில் புல்லட் ரயில் கட்டுப்பாட்டு மையம் அமைகிறது.

- சூரத், சபா்மதியில் இரண்டு பணிமனைகளும், மகாராஷ்டிரம் தாணேயில் ஒரு பணிமனையும் அமைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com