அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அக்னி-4 ஏவுகணையால் 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்க முடியும். இந்நிலையில், ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் அந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அனைத்து செயல்பாட்டு அம்சங்களையும் ஏவுகணை பூா்த்தி செய்ததுடன், அதன் மீதான நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்பட்டது. இந்தச் சோதனை வெற்றியடைந்ததன் மூலம், குறைந்தபட்சம் நம்பகமான முறையில் தடுப்புத் திறனை கொண்டிருக்க வேண்டும் என்ற இந்தியாவின் கொள்கை மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com