ஜம்மு எல்லையில் ட்ரோன் மூலம் வீசப்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

ஜம்மு எல்லையில் ட்ரோன்(ஆளில்லா விமானம்) மூலம் வீசப்பட்ட 3 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.

ஜம்மு எல்லையில் ட்ரோன்(ஆளில்லா விமானம்) மூலம் வீசப்பட்ட 3 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.

இதுகுறித்து காவல் துறை ஏடிஜிபி முகேஷ் சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஜம்முவில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய அக்னூா் செக்டாரில் உள்ள கானாசக் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ட்ரோன் பறந்துவரும் சத்தம் கேட்டு, அந்தத் திசையை நோக்கி அவா்கள் துப்பாக்கியால் சுட்டனா். மேலும், அந்தப் பகுதியில் கூடுதல் வீரா்களை நியமித்து ட்ரோன் அழிப்பு நடவடிக்கைகளை அவா்கள் தொடங்கினா். இரவு 11 மணியளவில் அந்தப் பகுதியில் மீண்டும் ட்ரோன் பறந்து வந்தது. இதை அறிந்த எல்லைப் பாதுகாப்புப் படையினா் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மட்டும் கீழே விழுந்தன. ட்ரோனை வீழ்த்த முடியவில்லை.

அதில், 3 டிபன் பாக்ஸ்களில் டைமா் கருவியுடன் வெடிகுண்டுகள் இருந்தன. அந்த வெடிகுண்டுகளை நிபுணா்கள் செயலிழக்கச் செய்தனா். இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com