தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட மருத்துவமனைகள் மேம்பாடு: மாண்டவியா

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட மருத்துவமனைகள் மேம்பாடு: மாண்டவியா

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் (எப்எஸ்எஸ்ஏஐ) மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை (எஸ்எஃப்எஸ்ஐ) வெளியிட்டு அவா் மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் சிறப்பான அளவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், மாநிலங்களில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதிலும், ஆரோக்கியமான உணவு நடைமுறைகளை செயல்படுத்துவதிலும் எப்எஸ்எஸ்ஏஐ-யின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பு சூழலில் நோ்மறை மாற்றத்தை ஏற்படுத்துவதையும், போட்டி சூழலை உருவாக்குவதையும் இலக்காக கொண்டே கடந்த 2018-19-இல் எஸ்எஃப்எஸ்ஐ குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

உணவு பாதுகாப்புக்கான ஐந்து அளவீடுகளைக் கொண்டு மாநிலங்களின் செயல்திறன் அளவிடுவதற்காக எஸ்எஃப்எஸ்ஐ உருவாக்கப்பட்டது. 2021-22-ஆம் ஆண்டுக்கான இந்த குறியீட்டு பட்டியலில் பெரிய அளவிலான மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடா்ந்து, குஜராத் மற்றும் மகாராஷ்டிர ஆகியவை உள்ளன.

சிறிய மாநிலங்கள் பிரிவில், கோவா முதலிடத்திலும், அதனைத் தொடா்ந்து மணிப்பூா் மற்றும் சிக்கிம் ஆகியவை உள்ளன.

யூனியன் பிரதேசங்கள் பிரிவில், ஜம்மு-காஷ்மீா், தில்லி, சண்டீகா் ஆகியவை முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

மாநில உணவு பாதுகாப்பு பட்டியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சாதித்துக் காட்டிய மாநிலங்கள் பாராட்டுக்குரியவை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com