மேக்கேதாட்டு: தமிழக அரசு புதிய மனு

மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே முன்மொழியப்பட்டுள்ள அணை கட்டுமானம் விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (சிடபிள்யுஎம்ஏ) ஆலோசித்து வருவதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசின்
மேக்கேதாட்டு: தமிழக அரசு புதிய மனு

மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே முன்மொழியப்பட்டுள்ள அணை கட்டுமானம் விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (சிடபிள்யுஎம்ஏ) ஆலோசித்து வருவதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு தரப்பில் வழக்குரைஞர் டி.குமணன் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், மேக்கேதாட்டு அணை குறித்த கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (சிடபிள்யுஎம்ஏ) ஆலோசித்து வருகிறது. இது காவிரி நீர் நடுவர் தீர்ப்பாயம் மற்றும் அதன் தொடர்ச்சியாக உச்சநீதின்றம் 16.02.2018-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாகும். கர்நாடகத்தால்  முன்மொழியப்பட்ட மேக்கேதாட்டு நீர்த்தேக்கத் திட்டமானது, காவிரி நீரை நம்பி வாழும் தமிழக விவசாயிகளின் நலனுக்கு கேடு விளைவிக்கும், வாழ்வாதாரம் பாதிக்கச் செய்துவிடும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தமிழகம் 30.11.2018-இல் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த அணைத் திட்டத்தால் தமிழகத்துக்கு நீர்வரத்து பாதிக்கப்படும். மேலும், சட்டம் 1956-இன் பிரிவு 6ஏ-இன் கீழ் "ஸ்கீம்' மூலம் வழங்கப்படாததால் இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்யவோ அல்லது விவாதிக்கவோ சிடபிள்யுஎம்ஏ-க்கு அதிகாரம் இல்லை. 
இந்த நிலையில், தமிழக அரசுக்கு சிடபிள்யுஎம்ஏ இடமிருந்து 25.5.2022-ஆம் தேதி வரப்பெற்ற கடிதத்தில், இந்த அமைப்பின் 16-ஆவது கூட்டம் 17.6.2022-இல் நடக்க உள்ளதாகவும், அந்தக் கூட்ட பொருள் பட்டியலில் மேக்கேதாட்டு திட்டத்தின் டிபிஆர் குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தின் நிலுவையில் இருப்பதால், இதுகுறித்து விவாதிக்கப்பட முடியாது. ஆகவே, இதுகுறித்து ஆலோசிக்க சிடபிள்யுஎம்ஏ-வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  மனுவில் கூறப்பட்டுள்ளது.
"விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது'
சென்னை/வேலூர், ஜூன் 7: இந்த விவகாரம் தொடர்பாக தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களிலும் மேக்கேதாட்டு அணை தொடர்பாக விஷயத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆணையத்தின் 16-ஆவது  கூட்டத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும். தமிழக அரசு தொடர்ந்து காவிரிப் பாசன விவசாயிகள், மாநில மக்களின் நலன்கள், உரிமைகளை காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியுடன் எடுக்கும் என்று அதில் தெரிவித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
"ஆணையத்துக்கு அதிகாரமில்லை': இதனிடையே, வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள சேனூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து விவாதிக்க 
ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக காவிரி மேலாண்மை ஆணையம் கூறுவது கண்டனத்துக்குரியது. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். இதில் மத்திய அரசின் சூழ்ச்சி உள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com