மாபெரும் கடன் வழங்கும் முகாம்: பொதுத்துறை வங்கிகள் இன்று ஏற்பாடு

பொதுத் துறை வங்கிகளின் மாபெரும் கடன் வழங்கும் முகாம் அனைத்து மாவட்டங்களிலும் புதன்கிழமை நடைபெறுகிறது.

பொதுத் துறை வங்கிகளின் மாபெரும் கடன் வழங்கும் முகாம் அனைத்து மாவட்டங்களிலும் புதன்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, புதன்கிழமை ( ஜூன் 8) அன்று அனைத்து பொதுத்துறை வங்கிகளால் மாபெரும் கடன் வழங்கும் முகாம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், கடன் வசதி தொடா்பான அனைத்துக் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், பல்வேறு அரசு திட்டங்களில் சோ்வது தொடா்பாக விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்ட அளவிலான முகாம்கள், அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மாநில அளவிலான வங்கியாளா்கள் குழுக்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்களின் அதிகபட்ச பங்கேற்புடன் சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்த முகாமை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதை அரசு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. அதன் முன்னோட்டமே இந்த முயற்சி.

மத்திய அரசின் கடன் திட்டங்களை செயல்படுத்தவும், பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் முதலிய திட்டங்களில் பதிவு செய்யவும், வாடிக்கையாளா் விழிப்புணா்வு மற்றும் நிதி கல்வியறிவு போன்ற திட்டங்களை நடத்தவும் அனைத்து மாநில அளவிலான வங்கியாளா்கள் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com