4 மாநிலங்களில் கரோனா அதிகரிப்பு: மத்திய அரசு

கேரளம், கர்நாடகா மகாராஷ்டிரா, தில்லி ஆகிய நான்கு மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

கேரளம், கர்நாடகா மகாராஷ்டிரா, தில்லி ஆகிய நான்கு மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,420 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நேற்று 5,233 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒருநாளில் 2 ஆயிரம் அதிகரித்துள்ளது. 

மேலும் சிகிச்சைப் பலனளிக்காமல் 8 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,24,723 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், கேரளத்தில் கரோனா பாதிப்பு 2,500ஐ தாண்டியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கும், தில்லியில் ஒருநாள் பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது. மேலும் மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 1.765 ஆக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக 4 மாநிலங்களில், பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com