காசிரங்காவில் வனவிலங்குகளை விபத்துகளிலிருந்து பாதுகாக்க புதிய உத்தரவு

அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் வாகன ஓட்டிகளிடமிருந்து வனவிலங்களைப் பாதுகாக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் வாகன ஓட்டிகளிடமிருந்து வனவிலங்களைப் பாதுகாக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காசிரங்கா தேசிய பூங்காவில்  வாகனங்களை அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் தான் இயக்க வேண்டும் என பூங்காவினைச் சேர்ந்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வாகனங்களை வேகமாக இயக்குவதன் மூலம் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. அதனை குறைப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அதிகாரிகள் கூறியிருப்பதாவது, “ காசிரங்கா தேசிய பூங்காவின் சுற்றுப்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள 9 பகுதிகளில் ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூங்காவின் தெற்கு பதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 37 வழியாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலையை ஒட்டியப் பகுதிகளில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கேமராவில் உள்ள தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் நம்பர் பலகைகளை அடையாளம் காண முடியும். வெள்ள காலங்களில் தேசிய நெடுஞ்சாலை 37 வழியாக செல்லும் வாகனங்களின் வேகமும் கட்டுபடுத்தப்படுகிறது.” என்றனர்.

தற்போதைய உத்தரவை மீறி வாகனங்களை மணிக்கு 40 கிலோமீட்டருக்கு மேல் வேகமாக இயக்குபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்களின் மீது வாகனங்கள் மோதி அவற்றிற்கு காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்துபவர்களின் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு தக்க தண்டனையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com