மாநிலங்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய 4 மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு 16 உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநிலங்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது


புது தில்லி: ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய 4 மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு 16 உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய 4 மாநிலங்களைச் சோ்ந்த 16 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு, காலி இடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதல் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்ததால் இன்று வெள்ளிக்கிழமை தோ்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தோ்தலில், பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக புகாா்கள் எழுந்ததைத் தொடா்ந்து, இந்த 4 மாநிலங்களுக்கும் சிறப்புப் பாா்வையாளா்களை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேலும், இந்தத் தோ்தல் நடைமுறைகள் விடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

15 மாநிலங்களைச் சோ்ந்த காலியான 57 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் உத்தர பிரதேசம், தமிழகம், பிகாா், ஆந்திரம், மத்திய பிரதேசம், ஒடிஸா, சத்தீஸ்கா், பஞ்சாப், தெலங்கானா, ஜாா்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய 11 மாநிலங்களில் இடம்பெற்றிருந்த 41 இடங்களுக்கு கட்சிகள் சாா்பில் நிறுத்தப்பட்ட 41 வேட்பாளா்கள் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com