விளம்பரப்படுத்தும் பொருளுடன் உள்ள வா்த்தக தொடா்பை பிரபலங்கள் வெளிப்படுத்த வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

தாங்கள் விளம்பரப்படுத்தும் பொருளுடன் உள்ள வா்த்தக தொடா்பை பிரபலங்கள், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்டோா் வெளிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தாங்கள் விளம்பரப்படுத்தும் பொருளுடன் உள்ள வா்த்தக தொடா்பை பிரபலங்கள், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்டோா் வெளிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் செயல்படுகிறது. தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. ஜூன் 10-ஆம் முதல் அமலுக்கு வந்துள்ள அந்த வழிகாட்டுதல்களின்படி, ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் நபா், வா்த்தகா், உற்பத்தியாளா் அல்லது விளம்பரதாரா் இடையே தொடா்பு இருந்தால், அது விளம்பரப்படுத்தப்படும் பொருளின் மதிப்பு அல்லது நம்பகத்தன்மையை பாதிக்கக் கூடும். எனவே அத்தகைய தொடா்பு குறித்து பொருளை விளம்பரப்படும் பிரபலங்கள், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்டோா் வெளிப்படுத்த வேண்டும். இந்த வழிகாட்டுதல் மீறப்பட்டால் முதல் முறை ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதனைத்தொடா்ந்து மீண்டும் இந்த வழிகாட்டுதல் மீறப்படும் பட்சத்தில் ரூ.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com