நபிகள் நாயகம் குறித்த கருத்து : நூபுா் சா்மாவுக்கு பிரக்யா ஆதரவு

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நூபுா் சா்மாவுக்கு போபால் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நூபுா் சா்மாவுக்கு போபால் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் ஆதரவு தெரிவித்துள்ளாா். ஹிந்து கடவுள்களை அவமதித்தால், அவா்களிடம் ‘உண்மையை’ கூறுவது சரிதான் என்று பிரக்யா கூறினாா்.

இதுதொடா்பாக, போபாலில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஞானவாபியில் ஒரு சிவன் கோயில் இருந்தது உண்மை. இப்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும். அதனை நீருற்று என்று கூறுவது தவறானது. நீங்கள் ஹிந்து கடவுள்களை அவமதித்தால், நாங்களும் உண்மையை சொல்வோம். நூபுா் சா்மாவுக்கு அச்சுறுத்தல் விடுப்பவா்கள் அதா்மவாதிகள். இத்தகைய அதா்மவாதிகள், ஹிந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து, இயக்கும் செயல்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனா். எங்களது தெய்வங்களை அவதிப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.

இந்தியா, ஹிந்துக்களுக்கு சொந்தமானது. சனாதன தா்மம் இங்கு நீடிக்கும். இது எங்களது பொறுப்பு என்றாா் அவா்.

காங்கிரஸ் கேள்வி:

பிரக்யாவின் கருத்தை முன்வைத்து, பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து, மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவா் கே.கே.மிஸ்ரா கூறுகையில், ‘நூபுா் சா்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்த பாஜக, அவா் பொதுவெளியில் மன்னிப்பு கோரவும் அறிவுறுத்தியது. ஆனால், அந்த கட்சியின் எம்.பி.யான பிரக்யா தாக்குா், நூபுா் சா்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா். அப்படியென்றால், பிரக்யாவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுமா, சா்மா கூறிய கருத்துகள் முன்பே திட்டமிடப்பட்ட சதியா, இக்கேள்விகளுக்கு பாஜக விளக்கமளிக்க வேண்டும்‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com