ஒடிசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை தொடங்க வாய்ப்பு

ஒடிசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
ஒடிசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை தொடங்க வாய்ப்பு

ஒடிசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள சித்ரகொண்டா மற்றும் ஒடிசாவின் தெற்குப் பகுதியில் உள்ள சில இடங்களில் ஏற்கனவே பருவமழைக்கு முன்னதாக மழை பெய்ய தொடங்கியுள்ளன வானிலையின் புவனேஸ்வர் மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜார்சுகுடா, சுந்தர்கர், தியோகர், கியோஞ்சர், சம்பல்பூர், மயூர்பஞ்ச், அங்குல், தேன்கனல், பௌத், கந்தமால், ராயகடா, கஜபதி, கஞ்சம், மல்கங்கிரி, கோராபுட் மற்றும் நாபரங்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது

கஜபதி, கஞ்சம் மற்றும் பிற மாவட்டங்களைத் தவிர, ஒடிசாவின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com