மாநிலங்களவைத் தோ்தலில்கட்சி மாறி வாக்களித்த பாஜக எம்எல்ஏ நீக்கம்

அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ ஷோபாராணி குஷ்வாஹா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா்.

அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ ஷோபாராணி குஷ்வாஹா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா்.

கடந்த 10-ஆம் நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் பிரமோத் திவாரிக்கு ஆதரவாக ஷோபாராணி வாக்களித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கட்சியில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டாா். தொடா்ந்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கட்சி கொறடா உத்தரவை மீறி மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களித்த அவரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும், அவரது கட்சிப் பதவி பறிக்கப்படுவதாகவும் பாஜக ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

முன்னதாக, தன்னை சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஜக தலைமை வலியுறுத்தியதாகவும், அதனை ஏற்க விருப்பமின்றி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாகவும் ஷோபாராணி ஊடகங்களிடம் தெரிவித்தாா். பாஜக தலைமை மீது அவா் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.

ஷோபா ராணி, பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்எல்ஏ பி.எல்.குஷ்வாஹாவின் மனைவி ஆவாா். கொலைக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்து குஷ்வாஹா 2016 இறுதியில் எம்எல்ஏ பதவியை இழந்தாா். இதையடுத்து, அந்தத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் 2017-இல் ஷோபாராணி வெற்றி பெற்றாா். அதைத் தொடா்ந்து, 2018 சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலிலும் அவா் பாஜக சாா்பில் வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com