மத்திய அரசின் ஸ்வதேஷ் திட்டத்தை விமர்சிக்கும் கேரள முதல்வர்

 வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்தவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஸ்வதேஷ்  திட்டத்தினை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்தவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஸ்வதேஷ்  திட்டத்தினை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பினராயி விஜயன் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார். அதில், கேரளத்திற்கான தனது கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக தெரிவித்துள்ளார். கரோனா பேராபத்துக் காலத்தில்  கேரளத்தைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் தங்களது வேலையினை இழந்து தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பினர். அவர்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ரூ.2000 கோடி நிதியுதவி கேட்கப்பட்டது. கேரள மாநிலத்தின் இந்த வேண்டுகோளை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை என தெரிவித்தார். இதனை அவர் லோக கேரள சபா எனும் மாநாட்டில் தெரிவித்தார். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது நேற்று ( ஜூன் 16) தொடங்கி வைத்தார்.


கேரள முதல்வர் பினராயி விஜயனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணத்தினால் மேடையில் முதல்வர் பினராயி விஜயன் பேச வேண்டிய உரையினை கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் வாசித்தார். இந்த மாநாட்டில் பல்வேறு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் இந்த ஸ்வதேஷ் திட்டம் கேரளத்திடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசின் தன்னிச்சையான முயற்சியில் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் இந்தத் திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு எதிராக கேரள காங்கிரஸ் புறக்கணிப்பில் ஈடுபட்டது. இந்த புறக்கணிப்பின் போது காவல் துறை அராஜகம் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்வரின் பெயரை விசாரணையில் தெரிவித்தது தொர்பாக காங்கிரஸ் பல இடங்களில் முதல்வர் பினராயி விஜயனை பதவி விலக் கோரி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com