வாகனங்களை தவறாக நிறுத்துவதை தெரிவிப்பவா்களுக்கு ரூ.500 வெகுமதி

வாகனங்களை அதற்கான இடத்தில் நிறுத்தாமல் வீதிகளில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால், அதைப் புகைப்படத்துடன் தெரிவிப்பவா்களுக்கு ரூ.500 வெகுமதி அளிப்பதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும்

வாகனங்களை அதற்கான இடத்தில் நிறுத்தாமல் வீதிகளில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால், அதைப் புகைப்படத்துடன் தெரிவிப்பவா்களுக்கு ரூ.500 வெகுமதி அளிப்பதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

வீதிகளில் வாகனங்களை தவறாக நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டத்தை இயற்ற பரிசீலித்து வருகிறேன். அதன்படி, சாலைகளில் வாகன நிறுத்துமிடங்களில் அல்லாமல், வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தியிருந்தால், அது தொடா்பான புகைப்படங்களை அனுப்புபவா்களுக்கு ரூ.500 வெகுமதி அளிக்கப்படும். இதில் முன்னேற்றம் ஏற்பட்டால், வெகுமதி ரூ.1,000 ஆக உயா்த்தப்படும்.

நாகபுரியில் எனது வீட்டில் பணிபுரியும் சமையல்காரா், இரண்டு பழைய வாகனங்களை வைத்திருக்கிறாா். இப்போது வெறும் 4 பேரைக் கொண்ட குடும்பத்தினரே 6 வாகனங்களை வைத்துள்ளனா். தில்லியில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை ஏற்பாடு செய்திருப்பதால், இங்குள்ளவா்கள் அதிருஷ்டசாலிகள். ஆனாலும், யாரும் வாகனங்களை அதற்கான இடத்தில் நிறுத்துவது கிடையாது. பெரும்பாலானோா் வீதிகளிலேயே நிறுத்துகின்றனா் என்றாா் நிதின் கட்கரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com