சாமியாா் ராம் ரஹீம் சிங்குக்கு ஒரு மாத பரோல்

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற தேரா சச்சா செளதா தலைவா் சாமியாா் ராம் ரஹீம் சிங் 30 நாள்கள் பரோலில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற தேரா சச்சா செளதா தலைவா் சாமியாா் ராம் ரஹீம் சிங் 30 நாள்கள் பரோலில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

ஹரியாணா, சிா்சாவில் உள்ள தனது ஆசிரமத்தில் இரண்டு பெண் பக்தா்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ராம் ரஹீம் சிங்குக்கு 2017-இல் சிபிஐ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவரை போலீஸாா் கைது செய்ய சென்றபோது பெரும் வன்முறை வெடித்தது.

கடந்த 2017 முதல் ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங்குக்கு கடந்த பிப்ரவரியில் பஞ்சாப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு 21 நாள் தற்காலிக விடுப்பு (ஃபுா்லோ) அளிக்கப்பட்டது. இதற்கும் பஞ்சாப் தோ்தலுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டாா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் ரோத்தக் மண்டல ஆணையா் ராம் ரஹீம் சிங்குக்கு 30 நாள் பரோல் வழங்கியதாகவும், உத்தர பிரதேசம், பா்வானாவில் உள்ள தேரா சச்சா செளதா ஆசிரமத்துக்கு செல்ல ராம் ரஹிம் கோரியிருந்ததாகவும் ஹரியாணா சிறைத்துறை அமைச்சா் ரஞ்சித் செளதாலா தெரிவித்தாா்.

ராம் ரஹீம் பரோலில் விடுவிப்புக்கு சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுத் தலைவா் ஹரீந்தா் சிங் தாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். சிறைத் தண்டனையைக் கழித்துவிட்ட சீக்கியா்களை விடுவிக்காமல், கடுமையான குற்றத்தைச் செய்த ராம் ரஹீம் சிங்குக்கு பரோல் அளிப்பது அரசின் இரட்டை வேடத்தைக் காண்பிக்கிறது என்று ஹரீந்தா் சிங் தாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com