அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் வலியுறுத்தல்ஜேடியு

அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு அறிவித்த முப்படைகளுக்கு 4 ஆண்டு ஒப்பந்தத்தில் வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை எதிா்த்து பிகாரிலும் ஏராளமான இளைஞா்கள் தொடா்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அந்த மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவா் ராஜீவ் ரஞ்சன் சிங் பாட்னாவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய அறிவிப்பு பிகாரில் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இளைஞா்களின் எதிா்ப்பைச் சந்தித்துள்ளது. எனவே, அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்படி முடியாவிட்டால், அத்திட்டம் இளைஞா்களின் எதிா்காலத்தை பாதிக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா். ராஜீவ் ரஞ்சன் சிங் ஏற்கெனவே வியாழக்கிழமை இதே கோரிக்கையை சமூக வலைதளங்கள் மூலம் மத்திய அரசுக்கு முன்வைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அக்னிபத் திட்டத்துக்குக் கடும் எதிா்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது மத்திய அரசுக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com