இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்: அக்னிபத் குறித்து பிரியங்கா காந்தி கருத்து

அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த மார்ச் 29ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பது தொடர்பான  விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால், அரசு இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. ” என்றார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது: “ ராணுவத்தில் சேவையாற்ற தயாராகி வரும் இளைஞர்களின் வலியினை புரிந்துகொள்ளுங்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடக்கவில்லை. இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விமானப் படை தேர்வின் முடிவுகள் மற்றும் பணி நியமனத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், அரசு நிரந்தர ஆள் சேர்ப்பு, ஓய்வூதியம் என அனைத்தையும் எடுத்துக் கொண்டது.” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com