செஸ் ஒலிம்பியாட் ஜோதி: தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் இன்று (ஜூன் 19) தொடக்கி வைத்தார்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி: தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் இன்று (ஜூன் 19) தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வை துவக்கி வைத்து பிரதமர் பேசியதாவது: “ நமது முன்னோர்கள் அறிவுத் திறன் மேம்பாட்டிற்காக செஸ் விளையாட்டினை கண்டுபிடித்துள்ளனர். செஸ் விளையாடும் குழந்தைகள் எதிர்காலத்தில் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களாக மாறுவார்கள். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா செஸ் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.” என்றார்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இப்போட்டி, தமிழகத்தில் ஒருங்கிணைப்படுவது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இப்போது தொடங்கப்படும் ஜோதி ஓட்டமானது, இனி வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தொடா்ந்து நடைபெற இருக்கிறது.

செஸ் விளையாட்டின் பிறப்பிடமான இந்தியாவிலிருந்து தொடங்கும் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம், சா்வதேச செஸ் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் வலம் வந்து, போட்டி நடைபெற இருக்கும் நகரத்தை வந்தடையும். எனினும், 44 செஸ் ஒலிம்பியாட் தொடங்க குறைந்த நாள்களே இருப்பதால், இம்முறை ஜோதி ஓட்டம் இந்தியாவுக்குள்ளாக மட்டும் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com