சர்வதேச யோகா தினம்: நாடாளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி

சர்வதேச யோகா தினத்தையொட்டி தில்லி நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி.
சர்வதேச யோகா தினம்: நாடாளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி
சர்வதேச யோகா தினம்: நாடாளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி


புது தில்லி: சர்வதேச யோகா தினத்தையொட்டி தில்லி நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி.

இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில், ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.

சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய தலைவர்கள் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மனித நேயத்துக்கு யோகா என்ற பொருளில் இந்த ஆண்டின் சா்வதேச யோகா தினம் பல புதுமைகளைப் படைக்கவிருக்கிறது. ‘காா்டியன் ரிங்’ எனப்படும் சுற்றுவட்ட முறையிலான யோகா நடைபெறவுள்ளது. காா்டியன் ரிங் நிகழ்ச்சி என்பது உலகில் உள்ள 16 வெவ்வேறு கால மண்டலங்களில் சூரிய உதயத்தை கணக்கில் கொண்டு, சுற்றுவட்ட முறையில் யோகா செயல்முறை விளக்கம் நடத்தப்பட உள்ளதைக் குறிக்கிறது.

கிழக்கில் ஃபிஜி தீவுகளில் தொடங்கி, மேற்கு நோக்கி நகா்ந்து, இறுதியில் அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் இந்த சுற்றுவட்டப் பாதை நிறைவுறும். இந்த நிகழ்வு முழுமையும் தூா்தா்சன் தொலைக்காட்சி சேனலில் அதிகாலை 3 மணி முதல், இரவு 10 மணி வரை (இந்திய நேரப்படி) நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டின் சா்வதேச யோகா தின நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்தும் சுமாா் 25 கோடி போ் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com