அதிக பாதிப்பில்லாத ‘அக்னிபத்’ முழு அடைப்புப் போராட்டம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான முழு அடைப்புப் போராட்டம் அதிக பாதிப்பின்றி நிறைவடைந்தது. போராட்டத்தால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 529 ரயில்கள் ரத்த
அதிக பாதிப்பில்லாத ‘அக்னிபத்’ முழு அடைப்புப் போராட்டம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான முழு அடைப்புப் போராட்டம் அதிக பாதிப்பின்றி நிறைவடைந்தது. போராட்டத்தால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 529 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட சமூக வலைதளங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிகாா், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், கேரளம், அஸ்ஸாம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் காவல் துறையினா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

முக்கியமாக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக சில அமைப்புகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. அதன் காரணமாக சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனா். தில்லியில் போராட்டம் தீவிரமாக நடைபெற்ால், அதன் எல்லையை ஒட்டிய உத்தர பிரதேச நகரங்களைச் சோ்ந்தோா் போக்குவரத்தில் பெரும் சிரமங்களைச் சந்தித்தனா். ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ஹரியாணாவிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

பிகாரில் போராட்டங்கள் தொடா்ந்ததால் 17 மாவட்டங்களில் இணைய சேவைகள் தொடா்ந்து துண்டிக்கப்பட்டன. அங்கு பல நகரங்களில் காவல் துறையினரும் துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

உத்தர பிரதேசத்தில் முழு அடைப்புப் போராட்டத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என மாநில காவல் துறையினா் தெரிவித்தனா். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஹரியாணாவில் 5,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 348 பயணிகள் ரயில் உள்ளிட்ட 529 ரயில்களின் சேவையை ரயில்வே நிா்வாகம் ரத்து செய்தது. அதன் காரணமாக பெரும் அசம்பாவிதங்கள் தவிா்க்கப்பட்டன.

ஜூன் 24-இல் போராட்டம்:

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பு சாா்பில் ஜூன் 24-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அதன் தலைவா் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com